
பெயர் கூடத் தெரியாமல் பேரன்பு சுமந்து பின்னாலேயே திரிந்த இதயங்கள் எத்தனை எத்தனை ?'ஒரு வாரம் உன்னிடம் ,ஒரு மாதம்
என்னிடம் 'என கோர்ட்டில் குழந்தையின் அன்பைப் பிரித்துக்கொண்டவர்கள் நம் தெருவிலும் வசிக்கிறார்கள் .எதிரெதிர் கேபினில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து அவர்கள் சிரித்தார்கள் .ஈழத்தில் அவனும் ,கனடாவில் அவளுமாக ,கொடுந்துயர் சுமந்து காத்திருகின்றனர் இருவர் .
இதற்கு எல்லாம் என்ன பெயர் ?தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு ,கிடைக்கிற மௌனம் எவ்வளவு அழகானது .மௌனத்திலும் தேடினால் ,ஆழத்தில் ஒவ்வொருவருக்குளும் பிய்த்தெரிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிடக்கிறது ப்ரியம்.ஆமாம் ....இதை எல்லாம் ப்ரியம் என்றே அழைத்தால் என்ன?
ஆகவே ,பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும் !
No comments:
Post a Comment